BREAKING: நாளை சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

 
விடுமுறை

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளிலும் நீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளையும் மழை எச்சரிக்கை நீடிப்பதால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக நாளை சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த்  ஜகடே இ.ஆ.ப அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

மழைக்காலங்களில் மின் சாதனங்களை கவனமுடன் கையாளுங்க. வீட்டை விட்டு, அவசியமில்லாமல் வெளியே வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பாக இருக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.