#BREAKING: சவுகார் ஜானகி காலமானார்... திரையுலகினர் இரங்கல்!

 
சவுகார் ஜானகி

பழம்பெரும் நடிகை சவுகர்ஜானகி உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று மதியம் காலமானார்.

மூச்சுத்திணறல் மற்றும் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நடிகை சவுகார் ஜானகி அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். 

சௌகார் ஜானகி

எல்.வி. பிரசாத் இயக்கத்தில் 1950-ல் வெளியான 'ஷாவுகாரு' என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானதால் ரசிகர்களால் 'சவுகார்' ஜானகி என அழைக்கப்பட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

'நீர்க்குமிழி', 'எதிர் நீச்சல்', 'உயர்ந்த மனிதன்', 'இரு கோடுகள்', 'தில்லு முல்லு' போன்ற எண்ணற்ற கலைப்படைப்புகளில் இவரது நடிப்பு போற்றத்தக்கது.

திரையுலகிற்கு இவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருதுகளைப் பெற்றுள்ளார்.