#BREAKING: பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
Mar 24, 2024, 12:00 IST
ஆஸ்திரேலியாவின் அருகில் உள்ளது பப்புவா நியூகினியா. அங்கு அம்புண்டி என்ற பகுதியில் நள்ளிரவு 1.30 மணிக்கு பெரிய அளவிளான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது. அம்புண்டியில் வடகிழக்கு பகுதியில் இருந்து 32 கி.மீ. தொலைவிலும், 35 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பப்புவா நியூ கினியாவில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் பப்புவா கினியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியிருந்தது. இதனால் 7 பேர் பலியாகினர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!
