#BREAKING: இளம்பெண் கார் ஏற்றிக் கொன்ற சம்பவம்... 17 வயது சிறுமியும் சிகிச்சைப் பலனின்றி பலி!
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான பாரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கர ரகளை வெடித்தது. குடிபோதையில் ஏற்பட்ட இந்தத் தகராறில், ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று அங்கிருந்து டூவீலரில் கிளபிய யாழினி மற்றும் 17 வயது சிறுமி மீது வெறித்தனமாகக் காரை ஏற்றியது.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் யாழினி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பலத்த காயமடைந்த 17 வயது சிறுமியை மீட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். அங்கே மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையிலும், பலனின்றி இன்று அதிகாலை 2.20 மணிக்கு அந்தச் சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்தாள். இதன் மூலம் இந்தத் துயரச் சம்பவத்தில் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்திருக்கிறது.

கார் ஏற்றிப் படுகொலை செய்த இந்த விவகாரத்தில், இதுவரைக்கும் 3 பேரை போலீசார் வளைத்துப் பிடித்துக் கைது செய்துள்ளனர். சரக்கடிச்சுட்டு சண்டை போடுறதும், அதுல சம்பந்தமே இல்லாதவங்க உயிரை எடுக்குறதும்... இந்த நள்ளிரவு பார் கலாச்சாரம் எங்கே போய் முடியப்போகுதோ?!
