#BREAKING : ஃபிரிட்ஜுக்குள் இளம்பெண் சடலம்... கொலையாளியை நெருங்கிய போலீசார்!

 
மகாலட்சுமி
பெங்களூருவை அதிர வைத்த ஃப்ரிட்ஜூக்குள் இளம்பெண் சடலம் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட சம்பவத்தில், முடிதிருத்தும் கடையில் ஊழியராக பணிபுரிந்தவரை போலீசார் நெருங்கியுள்ளனர். 

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குளிர்சாதன பெட்டியில் இளம் பெண் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஐந்து தனிப்படைகள் நியமிக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக பெங்களூருவில் முன்னேஸ்வரா பிளாக்கில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில், நெலமங்களா பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (29) என்பவர் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், வீட்டின் ஃப்ரிட்ஜுக்குள் உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டன. 

மகாலட்சுமி

கணவனைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார் மகாலட்சுமி. குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து வீட்டின் உரிமையாளர் மகாலட்சுமியின் கணவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மகாலட்சுமியின் தாயாரிடம் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் வீட்டிற்குச் என்று சோதனையிட்டபோது, ​​குளிர்சாதன பெட்டியில் மகாலட்சுமியின் உடல் உறுப்புகள் கிடந்தன. 

வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள். மகாலட்சுமியுடன் நெருங்கிய தொடர்புடைய அனைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அவரது தோழியும், முடிதிருத்தும் கடையில் பணிபுரியும் ஊழியரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவ்வப்போது மகாலட்சுமியை சந்திப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து செல்வதாக அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

குளிர்சாதன பெட்டி

 50 துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின், நேற்று மதியம் மகாலட்சுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கொலையை வேறு இடத்தில் செய்து விட்டு, சடலத்தை அடுக்குமாடி குடியிருப்புக்கு கொண்டு வந்திருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். கொலையின் ரத்தக்கறையோ, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியோ எதுவும் நடைபெறவில்லை. 

மகாலட்சுமி படுக்கைக்கு அருகில் நீல நிற சூட்கேஸ் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. மேலதிக விசாரணைகளின் பின்னரே விரிவான தகவல்களை வழங்க முடியும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web