#BREAKING: காலையிலேயே பயங்கரம்... ஆம்னி பேருந்து - கார் மோதி 3 பேர் உடல் நசுங்கி பலி!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று காலை நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரிலிருந்து தருமபுரி நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஆம்னிப் பேருந்து மீது மின்னல் வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது.

இந்த விபத்தின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்ததென்றால், காரில் பயணம் செய்த 4 பேரில் 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரின் ஒரு பகுதி பேருந்துக்குள் சொருகிய நிலையில், உயிருக்குத் போராடிக் கொண்டிருந்த ஒருவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பலியானவர்களின் உடல்களைப் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தேர்தலுக்காகச் சொந்த ஊர் சென்றபோது இந்த விபத்து நடந்ததா? அல்லது தூக்கக் கலக்கத்தினால் கார் கட்டுப்பாட்டை இழந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக ஓசூர் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
