#BREAKING: CSK அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம் - ஸ்டீபன் ஃபிளெமிங் சகாப்தம் நிறைவு!

 
ஸ்டீபன் ஃப்ளெமிங் ஜாகிர்கான்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். நீண்ட காலமாக சிஎஸ்கே அணியின் வெற்றிகரமான தலைமைப் பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்த ஸ்டீபன் ஃபிளெமிங் விலகியதைத் தொடர்ந்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

ஸ்டீபன் ஃப்ளெமிங் ஜாகிர்கான்

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி பல கோப்பைகளை வெல்லக் காரணமாகவும், அணியின் தூணாகவும் விளங்கிய ஸ்டீபன் ஃபிளெமிங் தனது தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இவரது விலகல் குறித்த யூகங்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஃபிளெமிங்கிற்குப் பதிலாக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளார். எதிர்வரும் ஐபிஎல் 2027 சீசனை இலக்காகக் கொண்டு சிஎஸ்கே அணியை மீண்டும் உத்வேகத்துடன் மீண்டெழச் செய்யும் மிகப்பெரிய பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டீபன் ஃப்ளெமிங் ஜாகிர்கான் கங்குலி

ஐபிஎல் 2027 தொடரில் மீண்டும் எழுச்சி பெறத் தயாராகி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ஜாகீர் கான் அணியின் மூத்த வீரரான எம்.எஸ். தோனியுடன் இணைந்து மிக நெருக்கமாகப் பணியாற்றவுள்ளார். இந்திய அணியின் வெற்றிகரமான பந்துவீச்சாளராகவும், சிறந்த கிரிக்கெட் மூளையாகவும் அறியப்படும் ஜாகீர் கானின் வழிகாட்டுதல் சிஎஸ்கே அணிக்கு புதிய பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.