ப்ரேக்கப் காதல்... காதலர் தினத்தில் கரப்பான் பூச்சிக்கு பெயர் சூட்டும் விநோதம்!

 
கரப்பான்பூச்சி காதல்

ஒரு முறை தான் காதல் வரும் தமிழர் பண்பாடு என்பதெல்லாம் பழங்கதையாகி, லிவிங் டூ கெதர் காதல்கள் சமூகத்தில் பெருக்கெடுத்து வருகின்றன. ஆனாலும், முதல் காதல் எப்போதும் நினைவில் நிற்கும் தானே? அப்படி கல்யாணத்தில் கைகூடாத காதலர்கள், தங்களது முன்னாள் காதலன் / காதலியை இப்படியும் கூட பழிவாங்கலாம் என்று அமெரிக்கர்கள் மகிழ்கிறார்கள்.
காதலர் தினத்தன்று, அமெரிக்காவில் உள்ள ப்ராங்க்ஸ் விலங்குகள் சரணாலயம், அங்குள்ள கரப்பான் பூச்சிக்கு காதல் கைகூடாதவர்கள், தங்களது முன்னாள் காதலன் அல்லது காதலி பெயரை சூட்டி மகிழ அனுமதிக்கிறது. இழந்த காதல் வலியை மனசுக்குள் போட்டு புதைக்காதீங்க என்று காதலை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமெரிக்காவின் ப்ராங்க்ஸ் என்ற வனவிலங்கு சரணாலயம் இந்த பெயர் சூட்டும் நடைமுறைக்கு வழி செய்திருக்கிறது.
ப்ராங்க்ஸ் சரணாலயத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கரப்பான் பூச்சிக்கு கட்டண அடிப்படையில் முன்னாள் காதலன் அல்லது காதலி பெயரை சூட்டலாம். அதனை அந்த முன்னாள் காதலன் / காதலிக்கு தெரிவிக்கவும் செய்யலாம். ஒருவிதமான பழிவாங்கல் என்றில்லாமல், காதல் கைகூடாத ஏக்கத்தில் தவிப்பவர்கள், மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுவதாக இந்த ஐடியா கவனம் பெற்றிருக்கிறது.
தங்களது முன்னாள் காதலன் அல்லது காதலி பெயரை, 20 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1246) செலுத்தி கரப்பான் பூச்சிக்கு சூட்டும் போதும் பெரும் ஆறுதல் கிடைப்பதாக இப்படி பெயர் சூட்டியவர்கள் கூறுகின்றனர். 
கடந்த 2011ல் இருந்து இந்த பெயர் சூட்டும் நடவடிக்கையில் பெரும் வருமானத்தையும் ப்ராங்க்ஸ் சரணாலயம் ஈட்டி வருகிறது. வருமானத்தை தங்களுக்காக மட்டுமன்றி, உலகளவில் செயல்படும் நலிந்த விலங்கு சரணாலயங்களுக்கும் ப்ராங்க்ஸ் பகிர்ந்து தருகிறது.
மடகாஸ்கர் கரப்பான் பூச்சிகள், கிட்டத்தட்ட நான்கு அங்குல நீளத்தினாலான உலகின் மிகப்பெரிய கரப்பான் பூச்சி இனமாகும். அந்த கரப்பான் பூச்சிக்கு தங்களது எக்ஸ் பெயரை சூட்டி அதற்கான வண்ணமயமான சான்றிதழையும் பெறலாம். அதனை வீட்டில் மாட்டி வைத்து மனம் ஆறவும் செய்யலாம்.

காதல்
இதற்கான முன்பதிவினை காதலர் தினத்துக்கு வெகுமுன்பே ப்ராங்க்ஸ் சரணாலயத்தின் இணையதளம் தொடங்கி விடுகிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஆன்லைனில் பெயர் சூட்டலை ஆர்டர் செய்யலாம். தங்களுக்கான கரப்பானை தேர்ந்தெடுக்கவும் செய்யலாம்.
முன்னாள் காதலர்கள் மட்டமல்ல கசப்பான உறவில் தத்தளிக்கும் கணவன் - மனைவியரும் பரஸ்பரம் கரப்பானுக்கு பெயர் சூட்ட குவிகிறார்கள். இதுதவிர்த்து மாமியாரின் பெயரை சூட்டும் மருமகள்களும் ஆன்லைன் வாயிலாக அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனபோதும் காதலித்து மனம் நொந்த முன்னாள் காதலர்கள்தான் ,ப்ராங்க்ஸ் சரணாலயத்தை வாழ்வித்து வருகிறார்கள்.
ப்ராங்க்ஸ் சரணாலயத்து கரப்பான் பூச்சிகளுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து டொராண்டோ உள்ளிட்ட ஒருசில மிருககாட்சி சாலைகளும் இதே ’நேம் எ ரோச்’ பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web