திணறுது மூச்சு... ஊர்ந்து செல்லும் வாகனங்கள்... லீவு முடிந்து சென்னை திரும்பும் மக்கள்... திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து!

 
போக்குவரத்து நெரிசல் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை

வார இறுதி விடுமுறை மற்றும் தொடர் சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்குச் சென்ற பொதுமக்கள், சென்னைக்குத் திரும்பத் தொடங்கியதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இன்று திங்கள்கிழமை, பள்ளி மற்றும் அலுவலகங்கள் திறக்கப்படுவதால், தென் மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்னை நோக்கிப் படையெடுத்தன.

டோல்கேட் வாகன நெரிசல் போக்குவரத்து

விக்கிரவாண்டி வடக்கு புறவழிச்சாலை முனையில் பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், தெற்கு புறவழிச்சாலையிலிருந்து டி.எஸ்.பி அலுவலகம் வரையிலான சர்வீஸ் சாலையில் வாகனங்கள் கடக்க முடியாமல் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து சென்றன.

சென்னை நோக்கிச் சென்ற வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த விக்கிரவாண்டி டோல்கேட்டில் கூடுதலாக 3 வழிகள் திறக்கப்பட்டு, மொத்தம் 9 வழித்தடங்கள் மூலம் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

போக்குவரத்து நெரிசல் ஈசிஆர் ஓஎம்ஆர் என்.எச்.தேசிய நெடுஞ்சாலை வாகன

நேற்று ஞாயிறு மாலை 6 மணி வரை மட்டும் சுமார் 40,740 வாகனங்கள் இந்தச் சுங்கச்சாவடியைக் கடந்து சென்றுள்ளன. நெரிசலைச் சீரமைக்க கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.