விமானத்தில் வந்த உடலை கொடுக்க லஞ்சம்.. கொந்தளித்த பாஜக நிர்வாகி !!

 
சுரேஷ்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள மைனாக்குடி கிராமத்தில் சுரேஷ் என்பவர் தனது மனைவி, இரண்டு குந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த சூழலில் குடும்ப நிலை காரணமாக புரூணை நாட்டிற்கு சுரேஷ் வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற சில மாதங்களிலேயே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்.

பாதிப்பின் தீவிரம் காரணமாக கடந்த 2022 டிசம்பர் 25ஆம் தேதி வெளிநாட்டிலேயே சுரேஷ் உயிரிழந்தார். சுமார் 55 நாட்களுக்குப் பிறகு புரூணை வாழ் நல் உள்ளங்களின் உதவியுடன் நேற்று இரவு விமானம் மூலம் சுரேஷ் சடலம் திருச்சி விமான நிலையம் அனுப்பி வைக்கப்பட்டது.

சுரேஷ்

திருச்சி விமான நிலையத்திற்கு விமானத்தில் கொண்டுவரப்பட்ட சுரேஷ் உடலை அவரது உறவினர்கள் பெரும் சோகத்தில் காத்துநின்றனர். அவர்களின் உறவினரா பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு ஆனந்தகுமாரும் ஆம்புலன்ஸுடன் காத்திருந்தார். 

சுரேஷ் உடலைப் பெற்றுக் கொள்ள வந்திருந்த அவரது தந்தையிடம் சடலத்தை வெளியே எடுத்துக் கொடுத்த ஒப்பந்த ஊழியர் ரூ.3 ஆயிரம் பெற்றுக் கொண்டு கொடுத்துள்ளார்.

சுரேஷ்

இதையறிந்த ஆனந்தகுமார், உடனே விமான நிலைய மேலாளர்களிடம் சென்று சடலத்தை வெளியே கொடுக்கக் கூட 3 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டுமா?. அவர்கள் சடலத்தை கூட மீட்க முடியாத வறுமையில் வாடும் குடும்பம் எனவும் புகார் கூறினார். உடனே பணத்தை திரும்ப பெற்றுக் கொடுத்ததோடு ஒப்பந்த ஊழியரை பணி நீக்கம் செய்வதாகக் கூறியுள்ளார்.
 

From around the web