பிரிக்ஸ் அமைப்பு யாருக்கும் எதிரானதல்ல - பிரதமர் மோடி பெருமிதப் பேச்சு!

 
பிரிக்ஸ் மோடி

புதுடெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்றுவரும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பிரிக்ஸ் கூட்டமைப்பு எந்தவொரு நாட்டிற்கும் அல்லது சர்வதேச அமைப்பிற்கும் எதிரானது அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

உலகளாவிய அமைதியையும் பொருளாதாரச் சமநிலையையும் காக்கும் நோக்கில், அனைத்து நாடுகளுடனும் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவே இக்கூட்டமைப்பு விரும்புவதாகப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் தலைமையில் நடைபெற்றுவரும் இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உலகளாவிய சவால்கள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதித்து வருகின்றனர்.