பிரிக்ஸ் மாநாடு.. இன்று டெல்லியில் பள்ளி, கல்லூரிகள், உச்ச நீதிமன்றம், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
Sep 11, 2026, 09:20 IST
டெல்லியில் நாளை 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்க உள்ள நிலையில், இன்று பள்ளி, கல்லூரிகளுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீனா அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் மாநாட்டின் பாதுகாப்பு மற்றும் நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் உள்ள 35 முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையங்களில் பயணிகளின் வசதிக்காகக் கூடுதல் கவுண்ட்டர்களும் திறக்கப்பட்டுள்ளன.

மாநாட்டு ஏற்பாடுகள் மற்றும் தீவிர பாதுகாப்புப் பணிகளைக் கருத்தில் கொண்டு, இன்று உச்ச நீதிமன்றம், டெல்லியில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்குச் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
