பிரிக்ஸ் மாநாடு: டெல்லியில் குவியும் உலக தலைவர்கள்.. உச்சக்கட்ட பாதுகாப்பு!

 
பிரிக்ஸ்

இன்று டெல்லியில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் டெல்லியில் குவிந்துள்ளனர். 7 ஆண்டுகளுக்குப் பின்னர் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகை தந்துள்ளார். கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு மாமல்லபுரம் உச்சிமாநாட்டிற்காக வந்த அவர், ஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. 

சீன அதிபர் ஜி ஜின்பிங்

உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இரு தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன அதிபர் ஷி ஜின்பிங் சீனா

ஆசியாவின் இருபெரும் பொருளாதார நாடுகளான இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவிலும், பிரிக்ஸ் கூட்டமைப்பின் வர்த்தக மற்றும் உலகளாவிய கொள்கை முடிவுகளிலும் இந்தப் பயணம் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.