மேடையில் மயங்கிவிழுந்து மணப்பெண் மரணம்.. அவரது தங்கைக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை

 
ஹேத்தல்

திருமணத்தின்போது மணப்பெண் மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து, அவரது தங்கை மணமகளாக மாறினார். 

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள சுபாஷ்நகர் பகுதியைச் சேர்ந்த ஹேத்தல் - விஷால் ஆகியோருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது, இந்த மணமக்களுக்கு திருமணத்துக்கு முந்தைய நாளில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மணமகளும், மணமகனும் அலங்கரிக்கப்பட்டு மேடைக்கு அழைத்துவரப்பட்டனர்.

ஹேத்தல்

அப்போது, யாரும் எதிர்பாராதவகையில் மணப்பெண் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மணப்பெண் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால் இருவீட்டாரும் பெரும் அதிர்ச்சி அடைந்து சோகத்தில் மூழ்கினர். மணப்பெண்ணின் பெற்றோர் கதறிஅழுதனர். அங்கிருந்த உறவினர்கள் இருவரையும் தேற்றினர். பின்னர், திருமணத்தை நிறுத்தவேண்டாம் என அங்கிருந்த உறவினர்கள் கூறினர். அவர்கள் ஆலோசனைபடி, ஹேத்தலின் தங்கையை விஷாலுக்கு மணமுடிக்க முடிவு செய்யப்பட்டு திருமணம் நடந்தது.

ஹேத்தல்

மகளின் திடீர் மறைவால் சோகத்தில் இருந்து மணப்பெண்ணின் குடும்பத்தினர், மற்றொரு மகளின் திருமண நிகழ்ச்சியில் உற்சாகத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தனர். இதனால் திருமணம் எளியை முறையில் நடைபெற்றது. 

From around the web