காதல் மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு - புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை!

 
தம்பதி காதல் காதலர்கள் புதுமாப்பிள்ளை புதுமணப்பெண்

கர்நாடக மாநிலம் துமகூருவில், காதல் மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனமுடைந்த புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துமகூரு மாவட்டம் குனிகல் மகாவீர் காலனியைச் சேர்ந்த அவினாஷ் (28) என்பவரும், ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

காதல் காதலர்கள் பூங்கா கோவை கேக் மாஸ்டர்

இந்நிலையில் சொந்த ஊரில் கோயில் திருவிழா நடைபெற்றதால் அவினாஷின் மனைவி பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஒரு வாரத்திற்கு மேலாகியும் அவர் கணவர் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை. மனைவியை அழைப்பதற்காக அவினாஷ் தனது பெற்றோருடன் ஹாசன் சென்றுள்ளார். ஆனால், அங்கு அந்தப் பெண் அவினாசுடன் குடும்பம் நடத்த வர மறுத்ததுடன், அவருடன் வாழ விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார்.

மனைவியின் பதிலால் கடந்த சில தினங்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்த அவினாஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

திருமணம் காதல் கள்ளக்காதல்

தகவல் அறிந்து வந்த குனிகல் காவல்துறையினர், அவினாஷின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகக் குனிகல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.