பகீர்... பெரும் ஆபத்து... கணிப்பு நிஜமானது... ஒரு வருஷத்துல கடல் மட்டம் 0.3 இன்ச் உயர்ந்துள்ளது... விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

 
கடல் மட்டம்

விஞ்ஞானிகளின் கணிப்பு நிஜமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டுக்கும் 2023 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் உலகளாவிய கடல் மட்டம் 0.3 அங்குலங்கள் உயர்ந்துள்ளது அதிர்ச்சியைத் தருகிறது. இந்த உயரம், சராசரி கடல் உயரத்துடன் ஒப்பிடுகையில் அதிகளவிலான உயரமாக கருதப்படுகிறது. சராசரியாக கடல்  ஒரு வருடத்தில் இத்தனை உயரத்திற்கு அதிகரிக்காது. 

1992ல் தொடங்கப்பட்ட அமெரிக்க-பிரெஞ்சு டாபெக்ஸ் / போஸிடான் மிஷன், 30 ஆண்டுகளுக்கும் மேலான செயற்கைக்கோள் அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, தகவலில் வெப்பமயமாதல், காலநிலை மற்றும் வலுவான எல் நினோவின் வளர்ச்சியே இந்த உயர்வுக்குக் காரணமாக கருதப்படுவதாக நாஸா தகவல் வெளியிட்டுள்ளது. 


 

உலக சசரி கடல் மட்டம் 1993ல் இருந்து சுமார் 4 அங்குலங்கள் உயர்ந்துள்ளதாகவும், இந்த அதிகரிப்பின் விகிதமும் 1993ல் ஆண்டுக்கு 0.07 அங்குலங்கள் இருந்து நிலையில் தற்போதைய 0.17 அங்குலங்கள்  உயர்ந்திருப்பதாக நாஸா கூறியுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. 

லா நினா மற்றும் எல் நியோ நிலைமைகளுக்கு இடையில் மாறியதன் காரணமாக இந்த திடீர் ஜம்ப் ஏற்பட்டுள்ளது. 2021 முதல் 2022 வரை லேசான லா நியா அந்த ஆண்டு கடல் மட்டத்தில் எதிர்பார்த்ததை விடக் குறைவான உயர்வை ஏற்படுத்தியது, 2023ல்  வலுவான எல் நினோ உருவாக்கப்பட்டதால் கடல் மேற்பரப்பு உயரத்தின் சராசரி அளவை அதிகரிக்க செய்துள்ளது. 

2050ல் உலகளாவிய சராசரி கடல் மட்டம், முந்தைய 100 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது அடுத்த மூன்று தசாப்தங்களில் மாற்றத்தின் அளவை இரட்டிப்பாக்கும் என்றும், உலகம் முழுவதும் வெள்ளத்தின் அதிர்வெண் மற்றும் தாக்கங்கள் அதிகரிக்கும் என்றும் நாஸா கடல் மட்ட மாற்றக் குழுவின் இயக்குனர் நாத்யா வினோகிராடோவா ஷிஃபர் எச்சரித்துள்ளார். 
லா நினா நிலைமைகளில், பொதுவாக கடலில் பெய்ய வேண்டிய மழை, ஒரு மாற்றுப்பாதையை உருவாக்கி, நிலத்தில் விழுகிறது. கடல் நீரை சுருக்கமாக குறைத்து, கடல் மட்டத்தில் சரிவை ஏற்படுத்துகிறது. மாறாக, எல் நினோ கட்டங்களில், வழக்கமான நில மழையின் பெரும்பகுதி கடலுக்குத் திரும்புகிறது, இதன் விளைவாக கடல் மட்டங்களில் தற்காலிக எழுச்சி ஏற்படுகிறது.

கடல் மட்டம்

ஒவ்வொரு வருடமும் வெப்பமடைதல் காரணமாக கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கடல் உயரம் அதிகரித்து வரும் விகிதமும் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஏற்கெனவே மெரினா கடல் அதிகரித்தால், சென்னை நகர் கடலுக்குள் மூழ்கி விடும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web