மேயர் பிரிஜிட் கார்சியா சுட்டுக்கொலை... நாடு முழுவதும் பதற்றம்!

 
பிரிஜிட் கார்சியா

 ஈக்வடார் நாட்டின் மேயர்  27 வயது பிரிஜிட் கார்சியா. இவர் கடந்த ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று மேயர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்நிலையில் மேயர் பிரிஜிட் கார்சியா மற்றும் அவருடன் சென்ற தகவல்தொடர்பு இயக்குநர் ஜெய்ரோ லூர் இருவரும்  சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.  இச்சம்பவம் நாடு முழுவதும் தற்போது அங்கு அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரிஜிட் கார்சியா


மேயர் கார்சியா, தகவல் தொடர்பு இயக்குநர் ஜெய்ரோ லூர் ஆகியோரது உடல்கள் கார் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்த  காவல்துறையினர் விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார்சியாவின் இறுதிச் சடங்கு இன்று மார்ச் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

2023ல்  ஜனாதிபதி வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், அந்நாட்டில் ஆயுதம் ஏந்திய குழுவினர் அரசியல்வாதிகளை குறிவைத்து கொலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பெண்மேயர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது  பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

From around the web