BREAKING... முன்னாள் எம்பி பிரிஜ் பூஷண் ஷரன் சிங் விடுதலை... பாலியல் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு... !
பெண் மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் தொல்லை புகாரில், பாஜக முன்னாள் எம்பியும், மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் ஷரன் சிங்கை டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை நீதிபதி அஸ்வினி பன்வார் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த வினோத் தோமரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வீராங்கனைகள் தரப்பில் அளிக்கப்பட்ட புகார்கள் மற்றும் காவல்துறையின் குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் கடந்த மே 2024-ல் வழக்கு விசாரணை தொடங்கியது. இந்த வழக்கின் இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அரசியல் மற்றும் விளையாட்டு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கு விசாரணையின் போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம் உரிய ஆதாரங்கள் அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த இந்த முக்கிய வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
