தங்கையைச் சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு விபத்து என நாடகமாடிய அண்ணன் கைது!

 
காதல் ஆணவக்கொலை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காதல் விவகாரம் காரணமாகத் தங்கையைச் சுத்தியலால் அடித்துக் கொன்ற அண்ணனையும், அதற்கு உடந்தையாக இருந்த தந்தையையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த சோஃபியா என்ற இளம் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்குக் குடும்பத்தில் எதிர்ப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

சோஃபியாவின் காதலைக் கண்டித்த அவரது உடன் பிறந்த அண்ணன், ஆத்திரத்தில் சோஃபியாவைச் சுத்தியலால் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சோஃபியா கொலை செய்யப்பட்டதை மறைப்பதற்காக, அவரது அண்ணனும் தந்தையும் இணைந்து அவர் சாலை விபத்தில்தான் உயிரிழந்ததாகக் கூறி நாடகமாடியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்துச் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இது திட்டமிடப்பட்ட ஆணவக் கொலை என்பதும், விபத்து போல சித்தரிக்கப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக முயன்ற அண்ணன் மற்றும் தந்தை இருவரையும் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.