தம்பியின் உயிரைக் காப்பாற்ற 150 முறை கன்னத்தில் அறைந்த அண்ணன் - உ.பி.யில் நெகிழ்ச்சி!

 
தம்பி பாம்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாம்பு கடித்து மயக்க நிலைக்குச் சென்ற தம்பியை விழிப்போடு வைத்திருக்க, வழியெல்லாம் கன்னத்தில் அறைந்து அண்ணன் காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை விஷப்பாம்பு கடித்த நிலையில், அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். நோயாளி தூங்கி விட்டால் விஷம் வேகமாகப் பரவி கோமா நிலைக்குச் சென்றுவிட வாய்ப்புள்ளது என்பதால், அவரை எந்தச் சூழலிலும் தூங்க விடாமல் விழிப்போடு வைத்திருக்குமாறு மருத்துவர்கள் அண்ணனிடம் அறிவுறுத்தினர்.

தம்பியை அழைத்துக் கொண்டு ஆம்புலன்சில் மேல் சிகிச்சைக்குச் சென்றபோது, தம்பி மயக்கமடையாமல் இருக்க வழிநெடுகிலும் சுமார் 150 முறை அவரது கன்னத்தில் அறைந்து அவரை விழிப்புடனேயே வைத்துள்ளார். அண்ணனின் இந்தத் தீவிர முயற்சியால் தம்பி மயக்கமடையாமல் மருத்துவமனை சென்றடைந்தார். தற்போது அவர் அபாய கட்டத்தைத் தாண்டி நலமடைந்து வருகிறார். தம்பியின் உயிரைக் காப்பாற்ற அண்ணன் நடத்திய இந்த பாசப் போராட்டத்தை மருத்துவர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.