அண்ணனின் கள்ளக்காதலால் தம்பி வெட்டிக் கொலை!
தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணனின் கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பி வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் பிரவீன் குமார் (25), இவர் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் தனது வீட்டில் இருந்த போது வீட்டிற்குள் புகுந்த வாலிபர் ஒருவர், திடீரென இவரை சரமரியாக அரிவாளால் வெட்டிக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரவீன்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தியதில் ஏரல் அருகே மாறமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பா (27) என்பவர் தனது மனைவி சக்தியுடன் கடந்த மாதம் அய்யன் கோவில் தெருவில் இவர்களது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடி வந்துள்ளார்.
அப்போது கொலை செய்யப்பட்ட பிரவீன் குமாரின் அண்ணன் வினோத் (30) என்பவருக்கும் செல்லப்பா மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செல்லப்பா தனது வீட்டை காலி செய்து மீண்டும் மாறமங்கலம் சென்று விட்டாராம். இதற்கிடையே நேற்று மாலை வினோத்தை கொலை செய்வதற்காக செல்லப்பா அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வினோத் இல்லாததால் அவரது தம்பி பிரவீன் குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
