தூத்துக்குடியில் கொடூரம்... மனைவியை வீட்டிற்குள் பூட்டி வைத்து தாக்கிய கணவர் உட்பட 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை!

 
பாலியல் வன்கொடுமை பலாத்காரம் மனைவி தகராறு தம்பதி சண்டை

தூத்துக்குடி அருகே மனைவியை வீட்டுக்குள் அடைத்து வைத்துத் தாக்கிய வழக்கில், அவரது கணவர் மற்றும் உறவினர்கள் இருவர் என மொத்தம் மூன்று பேருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் பகுதியில் வசித்து வந்தவர் குறியீஸ்வரி (35). இவருடைய நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறி, இவரது கணவர் முருகன், கணவரின் சகோதரர் சண்முகசுந்தரராஜ் மற்றும் மாமியார் பூச்சம்மாள் ஆகிய மூவரும் சேர்ந்து குறியீஸ்வரியை வீட்டுக்குள் வைத்துப் பூட்டித் क्रூரமாகத் தாக்கியுள்ளனர்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த குறியீஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து அந்த மூன்று பேரையும் கைது செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து கணவர் முருகன், மாமியார் பூச்சம்மாள் மற்றும் சண்முகசுந்தரராஜ் ஆகிய மூன்று பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.