செம ஆபர்.... ஏர்டெல், ஜியோவை மிஞ்சும் பிஎஸ்என்எல் !!

 
ஜியோ ஏர்டெல்

சின்னஞ்சிறு கைக்குழந்தை தொடங்கி வயதானவர்கள் வரை கைகளில் எந்நேரமும் மொபைல் போன்கள் தான். இண்டர்நெட் சேவைகள் இல்லாமல் ஒரு நாளை கூட கடத்தி விடமுடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. பணப்பரிவர்த்தனை தொடங்கி ஆன்லைன் அப்ளிகேஷன் வரை அனைத்தும் இணையதளங்கள் தான். இதனால் நீண்டநாள் இண்டர்நெட் சேவைகள், டேட்டாக்களை வழங்குவதில் மொபைல் சேவை நிறுவனங்களுக்கிடையே போட்டா போட்டிதான். அந்த வகையில் ஏர்டெல், ஜியோ நிறுவனங்களை விட மலிவு விலையில் அதிக டேட்டா மற்றும் நீண்ட நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.  

ஜியோ ஏர்டெல்

இந்தியா முழுவதும்   4ஜி சேவை வழங்கும் பணிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம்   வாடிக்கையாளர்களை கவர பல அசத்தலான ப்ரீபெய்ட் பிளான்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.  குறிப்பாக 84 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஓடிடி தளங்களை இலவசமாக வழங்கி வருகிறது.  அதன்படி பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில்  தினசரி 3ஜிபி டேட்டாவும், இதற்கான வேலிடிட்டி 84 நாட்களும் வழங்கிவருகிறது.   அன்லிமிடெட் அழைப்புக்களும்,  தினசரி 100 எஸ்எம்எஸ்களும் இலவசம் தான்.  அத்துடன்  ஸிங் மியூசிக்  , ஆஸ்ட்ரோடெல்  மற்றும் கேம்ஆன்  சேவைகளையும் வழங்கி வருகிறது.   நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 40KBPS வேகத்தில் அன்லிமிடெட் இணைய சேவை வழங்கப்படுவது வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

இந்தியா முழுவதும் 4ஜி சேவை!? மீண்டெழுகிறது பிஎஸ்என்எல்!


அதே போல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி   2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் கள்,   வேலிடிட்டி  84 நாட்கள் .இத்துடன் காலர் ட்யூன்ஸ்,   ஈரோஸ் நவ், என்டர்டெயின்மென்ட் சேவைகள், ஹார்டி மொபைல் கேமிங்   , லிஸ்ட்ன் மியூசிக் சர்வீசஸ் உட்பட  பல சேவைகளை வழங்கி வருகிறது.  இந்த 2 திட்டங்கள் மூலம் 84 நாட்கள்   ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.  பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த அதிரடி திட்டங்கள் மூலம் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web