புதுசு கண்ணா புதுசு... ரூ 100க்குள் 5 அசத்தல் ரீசார்ஜ் திட்டங்கள்.... !
இந்தியாவில் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ரீசார்ஜ் விலையை உயர்த்தி வருகின்றன. இந்நிலையில் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் BSNL தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவும் வெறும் 100 ரூபாய்க்குள் பல திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
BSNL ரூ 97 திட்டம்: இந்த ரூ.97 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 15 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா . மொத்தம் 30ஜிபி கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் உள்ளூர்/எஸ்டிடி/ரோமிங் வாய்ஸ் கால் சலுகை உள்ளது. அதிவேக டேட்டா வரம்பு முடிந்த பிறகு இணைய வேகம் 40kbps ஆக குறையும்.
BSNL ரூ 98 திட்டம்: இந்த ரூ.98 திட்டத்திலும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டாவுடன் 18 நாட்கள் செல்லுபடியாகிறது. இத்திட்டத்தில் அதிவேக டேட்டா வரம்பு முடிந்த பிறகு இணைய வேகம் 40kbps ஆக குறைந்து விடுகிறது.
BSNL ரூ.58 திட்டம்: இந்த ரூ.58 திட்டத்தில் 7 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும். அதிவேக டேட்டா வரம்பு முடிந்த பிறகு இணைய வேகம் 40kbps ஆக குறைந்து விடும்.
BSNL ரூ 94 திட்டம்: இந்த ரூ.94 திட்டத்தில் 30 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா . அதே நேரத்தில் அன்லிமிடெட் அழைப்புக்கள் கிடையாது அதற்கு பதில் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் 200 நிமிடங்கள் நிமிடங்கள் மட்டுமே.
BSNL ரூ 87 திட்டம்: இந்த ரூ.87 திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டாவை 14 நாட்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். தினசரி அதிவேக டேட்டா வரம்பு முடிந்த பிறகு இணைய வேகம் 40kbps ஆக குறைந்து விடுகிறது. இந்த திட்டம் ஹார்டி மொபைல் கேம்ஸ் சேவையையும் வழங்குவது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!