பட்ஜெட்: சரக்குக் கட்டணம் குறையும் - கடல்சார் வர்த்தகத்திற்கு 'கோஸ்டல் கார்கோ ப்ரமோஷன்'!

 
ஜேசிபி கடல் துறைமுகம் கட்டுமானம் பாலம்

இந்தியாவின் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் கடற்கரை ஓரக் கப்பல் போக்குவரத்தைப் (Coastal Shipping) பலப்படுத்த 'கோஸ்டல் கார்கோ ப்ரமோஷன் ஸ்கீம்' (Coastal Cargo Promotion Scheme) அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெறும் 6 சதவீதமாக இருக்கும் கடல்வழிச் சரக்கு போக்குவரத்தை 2047-க்குள் 12 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சாலை மற்றும் ரயில் வழி சரக்கு போக்குவரத்து மீதான அழுத்தம் குறையும். குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள சென்னை, தூத்துக்குடி மற்றும் எண்ணூர் துறைமுகங்களை இணைக்கும் வகையில் சிறு கப்பல்கள் மூலம் சரக்குகளைக் கொண்டு செல்வது எளிதாக்கப்படும். இது எரிபொருள் செலவைக் குறைப்பதுடன், சுற்றுப்புறச் சூழல் மாசுபாட்டையும் கட்டுப்படுத்தும். சரக்குக் கட்டணம் குறைவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கட்டுக்குள் இருக்க வாய்ப்புள்ளது.