பட்ஜெட்: தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைகிறது - இறக்குமதி வரி குறைப்பு!

 
திருச்சியில் தொடரும் கடத்தல்! ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்!

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக, தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது இந்திய நகைச் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வரி குறைப்பால் கடத்தல்கள் குறையும் என்றும், வெளிப்படையான வர்த்தகம் அதிகரிக்கும் என்றும் மத்திய அரசு நம்புகிறது.

இந்தியாவில் தங்கம் ஒரு முதலீடாகவும், கலாச்சார அடையாளமாகவும் பார்க்கப்படும் நிலையில், இந்த வரி குறைப்பு நகை விற்பனையை அதிகரிக்கும். குறிப்பாகத் தமிழகத்தில் திருமண சீசன்கள் தொடங்கவுள்ள நிலையில், விலை குறைவு சாமானிய மக்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும். அதேபோல், தொழில்துறை பயன்பாட்டிற்கான பிளாட்டினம் மற்றும் பிற அரிய உலோகங்களின் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளதால், தொழில்நுட்பத் துறையும் லாபம் அடையும்.