பட்ஜெட் ஹைலைட்ஸ்: சிட்டி எகனாமிக் ரீஜியன்ஸ்' - நகரங்களின் புதிய முகம்!
Feb 1, 2026, 11:58 IST
இந்தியாவின் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களை 'பொருளாதார மண்டலங்களாக' (Economic Regions) மாற்றும் புதிய திட்டத்தை நிதி அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார். இது Tier-2 மற்றும் Tier-3 நகரங்களின் உட்கட்டமைப்பை (Infrastructure) சர்வதேச தரத்திற்கு உயர்த்த உதவும்.
இதன் மூலம் போக்குவரத்து வசதிகள், ஸ்மார்ட் கழிவு மேலாண்மை மற்றும் 24 மணி நேரக் குடிநீர் வசதி போன்றவை முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்தப்படும். தமிழகத்தில் கோவை, திருச்சி, சேலம் மற்றும் திருப்பூர் போன்ற நகரங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சென்னையை மட்டுமே நம்பியிருக்கும் தொழில் வளர்ச்சியைப் பிற நகரங்களுக்கும் பரவச் செய்யும்.
