BUDGET HIGHLIGHTS | என்னென்ன சிறப்பு? மருத்துவப் படிப்புக்கு கூடுதல் இடங்கள்!

நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அமளிக்கிடையே பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார் நிர்மலா சீதாராமன்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும். அடுத்த நிதியாண்டில் மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும்.
நாடு முழுவதும் மேல்நிலைப் பள்ளிகள், சுகாதார நிலையங்களுக்கு பாரத் நெட் மூலம் பிராட்பேண்ட் வசதி.
சிறு முதல் பெரிய தொழில் வரை உற்பத்தியை அதிகரிக்க தேசிய உற்பத்தி இயக்கம் உருவாக்கப்படும்.
மாணவர்களுக்கான பாடங்களை தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்க திட்டம்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை
எஸ்சி/எஸ்டி பெண்களை தொழில் முனைவோர்களாக்க முதன்முறையாக புதிய திட்டம்
விவசாயிகளுக்கும் சிறு நிறுவனங்களுக்கும் கடன்
கிசான் கிரெடிட் கார்டு மூலம் 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் பெற நடவடிக்கை
கிசான் கடன் அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் வசதி
கூட்டுறவுத் துறைக்கு கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும்.
புத்தாக்க நிறுவனங்களுக்கு கடன் வட்டியில் சலுகைகள்
சிறு குறு நிறுவனங்கள் இந்தியாவை உற்பத்தி மையமாக கொள்ளும் அளவுக்கு வசதிகள் உருவாக்கப்படும்.
சிறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்கப்படும்.
கிராமப்புறங்களில் கூடுதலாக 1.5 லட்சம் தபால் நிலையங்கள் அமைக்கப்படும்.
தபால் நிலையங்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்படும்.
விவசாயத் துறைக்கான அறிவிப்புகளைக் கேட்ட பிரதமர் நரேந்திர மோடி, மேசையைத் தட்டி வரவேற்பு தெரிவித்தார்.
விவசாயத் துறைக்கான அறிவிப்பு
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுகிறது.
பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்.
வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை பெருக்க திட்டம்.
உளுந்து, துவரம் பருப்பு ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்க திட்டம் அறிமுகம்.
சிறப்பான சாகுபடி ஏற்ற விதைகளை நாடு முழுவதும் விநியோகிக்க திட்டம்.
பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
பீகார் மாநில விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டம் அறிவிப்பு
வரி, மின்சாரம், சுரங்கம், நிதி, சீர்திருத்தம் உள்ளிட்ட ஆறு முக்கிய அம்சங்களுக்கு முக்கியத்துவம்
பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!