பட்ஜெட்: ₹12 லட்சம் வரை வரி இல்லை.. நடுத்தர வர்க்கத்தினருக்கு வருமான வரி மாற்றம்!

 
12%, 28% ஜிஎஸ்டி வரி விகிதங்களை நீக்க மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்!

இன்று (பிப்ரவரி 1, 2026) காலை 11 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வரும் மத்திய பட்ஜெட் 2026-27 தாக்கலில், இதுவரை வெளியாகியுள்ள சுவாரசியமான அறிவிப்புகள் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

தமிழகத்திற்கு 'ரேர் எர்த்' (Rare Earth) காரிடார்

தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் விதமாக, செமிகண்டக்டர் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பிற்குத் தேவையான கனிமங்களை எளிதாகப் பெற தமிழ்நாட்டில் 'ரேர் எர்த் காரிடார்' அமைக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இது மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.

நடுத்தர வர்க்கத்தினருக்கான வருமான வரி மாற்றம்

புதிய வருமான வரி முறையின் (New Tax Regime) கீழ் வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன: புதிய வரி முறையைப் பின்பற்றுபவர்களுக்கு ₹12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிலையான கழிவு (Standard Deduction) ₹75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், சம்பளம் பெறுவோர் ₹12.75 லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை.