தவெக அரசின் முதல் பட்ஜெட்... பள்ளிகளில் சூப்பர் கிளீன் மற்றும் சூப்பர் கேம்ப்பஸ் திட்டங்கள் !

 
மரிய வில்சன்

தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தனது முதல் பட்ஜெட்டைச் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளது. பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன், ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் ஏராளமான சாதனைகளை முதல்வர் விஜய் படைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல முக்கியத் திட்டங்களை அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.

நிதியமைச்சர் மரிய விலசன்

பொதுமக்களின் மின்கட்டணச் சுமையைக் குறைக்கும் வகையில் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக அவர் தனது உரையில் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும் வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் 2026ஆம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் உள்ள மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தாய்மாமன் சீர் திட்டம் தொடங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் மரிய வில்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மரிய வில்சன்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்குத் தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்றும் இதற்காக ரூ.560 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளை மேம்படுத்த ரூ.2,312 கோடி ஒதுக்கப்படுவதுடன் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்ப்பஸ் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் புழக்கம் குறித்துப் புகார் அளிக்க 1058 என்ற இலவச எண் அறிமுகம் செய்யப்படும் என்றும் நிதி அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.