பட்ஜெட் 2025 : இளைஞர் மற்றும் கல்விக்கான சிறப்பு அம்சங்கள்!

இன்று பிப்ரவரி 1ம் தேதி சனிக்கிழமை 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 8வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் உரையாற்றினார். பட்ஜெட் தாக்கல் முடிந்தவுடன் பிப்ரவரி 3ம் தேதி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் உரையில், கல்வி மற்றும் இளைஞர்களுக்கான சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் படி, கிராமப் புறங்களில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், கல்வி நிலையங்களுக்கு இலவச பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும்.
இந்தியா முழுவதும் 23 ஐஐடிக்கள் விரிவாக்கம் செய்யப்படும்.
இதன் மூலம் 6,500 மாணவர்கள் பயன்பெறுவார்கள். மானியத்துடன் கூடிய முத்ரா கடன் திட்டம் மருத்துவத்துறைக்கும் விரிவாக்கம் செய்யப்படும். ஐஐடி விரிவாக்கம் மூலமாக மேலும் 6,500 மாணவர்கள் பயன்பெறுவர். ஐ.ஐ.டி.,களில் இந்த ஆண்டு கூடுதலாக 65 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படும்
அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மைய வசதி ஏற்படுத்தப்படும். நகர்ப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். புற்றுநோய் உள்ளிட்ட அரியவகை நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்துகளுக்கு அடிப்படை இறக்குமதி வரியில் விலக்கு அளிக்கப்படுகிறது. 36 வகையான உயிர் காக்கும் மருந்துகளுக்கு அடிப்படை இறக்குமதி வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுகிறது.
பீகாரில் ஐ.ஐ.டி.,கள் விரிவுபடுத்தப்படும். பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம் அமைக்கப்படும். மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் 50000 அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் அரசுப் பள்ளிகளில் நிறுவப்படும். பள்ளிகளில் AI தொழில்நுட்பத்திற்காக ரூ.5 ஆயிரம் கோடியில் புதிய மையங்கள் அமைக்கப்படும்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு உயர்நிலை பள்ளிகளிலும் பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கப்படும். ‘பாரத் நெட்’ திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் இந்த பிராட் பேண்ட் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!