விமான நிலைய 2வது ஓடுதளத்துக்காக இடிக்கப்படும் கட்டடங்கள்!

 
விமான நிலையம்

சென்னையில் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள 2 வது ஓடுதளத்தை முழுமையாக பயன்படுத்துவதற்கு இடையூறாக இருக்கும் உயரமாக கட்டடங்களை இடிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  கொளப்பாக்கம் பகுதியில் அதிக அளவிலான தென்னை மரங்கள், தொலைபேசி கோபுரங்கள் மற்றும் உயரமான கட்டடங்கள் கண்டறியப்பட்டு இருப்பதாகவும்   மக்களுக்கு குறைந்தபட்ச பாதிப்புகள் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும்  விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 2 ஓடுதளங்கள் இருக்கின்றன. பிரதான ஓடுதளம் 3.66 கி.மீ. தொலைவும், 2வது ஓடுதளம் 2.89 கி.மீ. தொலைவும் கொண்டது. இந்நிலையில், 2 வது ஓடுதளத்தை முழுமையாக பயன்படுத்த 509 தடைகளை விமான நிலைய அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த தடைகளால் 2 வது ஓடுதளத்தில் சிறிய ரக விமானங்கள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

knife airport விமான நிலையம் கத்தி விமானநிலையம் உள்ளூர்


தென்னை மரங்கள், தொலைபேசி கோபுரங்கள் மற்றும் உயரமான கட்டடங்களை அகற்ற விமான நிலையம் தரப்பில் தொடர்ந்து உள்ளாட்சி நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன.இதனைத்தொடர்ந்து, 133 தென்னை மரங்கள் மற்றும் 7 தொலைபேசி கோபுரங்கள் அகற்றப்பட்டன. தொடர் முயற்சியால் 2023 ல்  தடைகளின் எண்ணிக்கை 180 ஆக குறைக்கப்பட்ட நிலையில், 2024 ல் 53 புதிய தொலைபேசி கோபுரங்கள், புதிய கட்டடங்களால் 278 இடையூறுகளாக மீண்டும் அதிகரித்துள்ளது.  இடையூறுகளை குறைப்பதற்காக குறைந்த உயரத்தில் வளரக்கூடிய தென்னை மர விதைகளை விமான நிலையம் தரப்பில் சுற்றுப்புற மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.  

விமான நிலையம்

உயரமான கட்டடங்களை கண்டறிந்து 2 மீட்டர் வரை இடிக்க அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான டி.ஆர்.பாலு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது விமான நிலைய அதிகாரிகள் தரப்பில், 2 வது ஓடுதளத்தை முழுமையாக பயன்படுத்தினால், சென்னைக்கு அதிக அளவிலான விமானங்களையும் பெரிய ரக விமானங்களையும் இயக்க முடியும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் 2 வது தளத்துக்கு இடையூறாக இருக்கும் மரங்கள், கட்டடங்கள் இவற்றை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்ற கலெக்டர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!