கட்டுகட்டாக பணம், குவியல் குவியலாக நகைகள்... யூடியூபர் மதுமிதா மீது நகை திருட்டு வழக்குப்பதிவு!

 
நாகர்கோவில் இன்ஸ்டா யூ-ட்யூபர் மதுமிதா

கட்டு கட்டாகப் பணம், குவியல் குவியலாக தங்க நகைகள் என்று வீடியோக்களில் தெறிக்க விடும் மதுமிதா தான் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து செய்திகளில் அடிப்பட்டுக் கொண்டிருக்கிறார். நகைகொள்ளை என்று புகாரளித்த அடுத்த நாளே மீண்டும் நகைகளை குவித்து வைத்து வீடியோ வெளியிட்டவர், கட்டு கட்டாக பணத்தையும் வீடியோவில் காட்டினார். அதற்கடுத்த இரண்டு நாட்களில், பாலியல் வழக்கில் மதுமிதா கைதாகி, எச்சரிக்கப்பட்ட சம்பவம் வெளியானது. இந்நிலையில் நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மதுமிதா மீது, பேச்சிமுத்து என்பவரிடம் இருந்து 5 சவரன் நகையைத் திருடியதாக ராஜாக்கமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுமிதா

நாகர்கோவிலைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டு பிசியோதெரபி சிகிச்சைக்குச் சென்றபோது யூடியூபர் மதுமிதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காரில் இணைந்து பயணித்துள்ளனர். அப்போது பேச்சிமுத்துவுக்குத் தெரியாமல் அவரது 5 சவரன் நகையை மதுமிதா திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மதுமிதா

இது குறித்து வெளியில் கூறினால் தீவிர விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மதுமிதா மிரட்டியதால், பயந்துபோய் அப்போது புகார் அளிக்கவில்லை எனப் பேச்சிமுத்து தெரிவித்துள்ளார். தற்போது துணிச்சலாக அளித்த புகாரின்பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் யூடியூபர் மதுமிதா மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.