உதகை அருகே மண்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்து மீட்பு: ஓட்டுநர் பலி; 8 பேர் உயிருடன் மீட்பு
Oct 24, 2026, 17:00 IST
நீலகிரி மாவட்டம், உதகை அருகே பர்லியாரில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்து சுமார் 10 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டது.

மண்சரிவில் சிக்கிய பேருந்தின் மேற்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணிகளில் நடத்துநர் மற்றும் பயணிகள் உட்பட 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இருப்பினும், பேருந்து ஓட்டுநர் ஜனகராஜ் உயிரிழந்தார். அவரது உடல் மீட்கப்பட்டது.

பேருந்தை மீட்கும் பணியில் ராட்சத கிரேன் பயன்படுத்தப்பட்டது. மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
