பெரும் சோகம்... பேருந்து கவிழ்ந்து கோரவிபத்து... 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் பலி... 30 பேர் படுகாயம்!

 
பேருந்து


திருப்பூர் மாவட்டத்தில்  பழைய பேருந்து நிலையத்திலிருந்து சத்தியமங்கலத்திற்கு தினமும்  ஏராளமான கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. எப்போதும் போல் இன்று பிற்பகல்  சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை செங்கப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது.

பேருந்து

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சத்தியமங்கலம் நோக்கி செங்கப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த சரக்கு லாரியை முந்திச் செல்ல முயற்சித்தது.  பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த நிலையில்  நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆம்புலன்சுக்கும்  காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் ஈரோடு தனியார் கல்லூரியில் பயின்று வந்த பெரியசாமி, ஹரிகிருஷ்ணன் இருவருமே உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

ஆம்புலன்ஸ்

மேலும் 4 பேரின் கை, கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், படுகாயம் அடைந்த 21 பேர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேருந்தில் வேகத்தால் விபத்து நடந்ததா? அல்லது வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதா? எனத் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!