தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து... 7 பேர் பலி!

 
விபத்து

தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலியான சோகத்தால் அப்பகுதியில் பெரும் சோகம்!

ஹிமாச்சல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பைராகர் பகுதியில் இருந்து சம்பா நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து மலைப் பாதையில் உள்ள சலுஞ்ச் மோட் என்ற வளைவில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

. மலைப் பாதையின் குறுக்கேயான குறுகலான சாலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாழ்வான சாலைப் பகுதிக்குத் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்தக் கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பதுடன் மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

போலீசார் ரோந்து போலீஸ் காவலர் கொலை கொள்ளை

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் பேருந்து கவிழ்ந்ததற்கான உண்மையான காரணம் குறித்துத் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.