நெகிழ்ச்சி வீடியோ... பேருந்தில் ஏறும்போது தவறி விழுந்த முதியவரை காப்பாற்றிய இளைஞர்...!

 
kerala

 

கேரள மாநிலம் கண்ணூர் குட்டியாட்டூர் தடத்தில் 'பத்தாம் மைல்' என்ற இடத்தில் தனியார் பேருந்தில் ஏற முயன்றபோது முதியவர் ஒருவர் கால் தடுமாறி பின்னோக்கி விழவிருந்தார். பேருந்து இயங்கியதால் நிலைதடுமாறிய அவர் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழப்போனார். அந்த நொடியில் பேருந்தில் இருந்த ஊழியர் ஒருவர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அவரைச் சாதுரியமாகக் காப்பாற்றினார்.

பின் இருக்கையில் அமர்ந்திருந்த கொளச்சேரியைச் சேர்ந்த பேருந்தின் கிளீனர் அதுல் (வயது 30) என்பவர் சீறிப்பாய்ந்து வந்து முதியவரின் கைகளையும் உடலையும் கெட்டியாகத் தாங்கிப் பிடித்தார். இதனால் முதியவர் எந்தவிதக் காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பேருந்தின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்தத் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.சரியான நேரத்தில் சாதுரியமாகச் செயல்பட்டு முதியவரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் அதுலுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.