நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து 7 தமிழக பக்தர்கள் பலி... பெரும் சோகம்!

 
நேபாளம் நேபாளம்


நேபாளத்தில் ஆன்மிகச் சுற்றுலா சென்ற இந்தியப் பயணிகள் பயணித்த பேருந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 7 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 9 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவுக்கு மேற்கே சுமார் 120 கி.மீ. தொலைவில் உள்ள ஷாஹித் லகான் கிராமம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

நேபாளம்

கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய இந்தியப் பக்தர்கள் பயணித்த பேருந்து, ஒரு குறுகிய மலைச்சாலையில் இறங்கும்போது வளைவில் திரும்ப முயற்சித்துள்ளது.  அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சுமார் 150 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து உருண்டது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் நேபாள ராணுவம் மற்றும் உள்ளூர் மீட்புப் படையினர் விரைந்து வந்தனர்.

செங்குத்தான பள்ளம் என்பதால் மீட்புப் பணியில் பெரும் சவால்கள் நிலவின.இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 9 பேரை மீட்ட படையினர், அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.உயிரிழந்த 7 இந்தியர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட இந்தியர்களின் விபரங்களைச் சேகரிக்கவும், அவர்களது உடல்களைச் சொந்த ஊருக்குக் கொண்டு வரவும் இந்தியத் தூதரகம் நேபாள அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது.