பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து; பெண்கள், குழந்தைகள் உட்பட 40பேர் பலி!

 
பள்ளம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிலிருந்து 48 பயணிகளுடன் இஸ்லாமாபாத் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த  சொகுசு பேருந்து ஒன்று இன்று அதிகாலை கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள தனா சார் என்ற மலைப்பாங்கான வளைவுப் பகுதியைக் கடந்து செல்லும் போது, திடீரென பேருந்தின் பிரேக் செயலிழந்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தாறுமாறாக ஓடியுள்ளது.

பாகிஸ்தான்

கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி, அங்குள்ள மிக ஆழமான மலைப் பள்ளத்திற்குள் தலைகீழாகக் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இமயமலைப் பிராந்தியத்தில் நேர்ந்த இந்த கோர விபத்தின் கடுமையான தாக்கத்தால், பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 40 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் உடல் நசுங்கி பலத்த காயமடைந்த 8 பயணிகள் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு அவசரச் சிகிச்சைக்காக அருகில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாகிஸ்தான்

விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாண மீட்புக் குழுவினர் பனிப்பாறைகளுக்கு இடையே மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

மலைப்பாதைகளில் நிலவும் மோசமான வானிலை மற்றும் வாகனங்களின் பராமரிப்பின்மை காரணமாகவே இந்த விபத்து நேரிட்டுள்ளதாகக் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.