அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து சிறுவன் உட்பட 15 பயணிகள் படுகாயம்... பரபரப்பு!

 
அரசுப்பேருந்து அரசுப்பேருந்து

மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேற்று மாலை 40 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த 45 வயது சுரேஷ்குமார் பேருந்தை ஓட்டிச் சென்றார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நான்குவழிச் சாலையில் மாலை 6.30 மணி அளவில் பேருந்து சென்று கொண்டிருந்தது.

ஆம்புலன்ஸ்

அப்போது நரிக்குடி பிரிவு பகுதியில் வந்தபோது பேருந்து எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கணநேரத்தில் நிலைதடுமாறிய பேருந்து சாலையோரம் இருந்த ஒரு பெரிய பள்ளத்தில் இறங்கி நின்றது. இதனால் பேருந்தின் உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் மரண பயத்தில் அலறினர்.

போலீஸ்

இந்த விபத்தில் ஓட்டுநர் சுரேஷ்குமார், 40 வயது நடத்துனர் சுரேஷ், அபிராமம் மலைச்சாமி, பரமக்குடி பத்மா, 16 வயது சிறுவன் ஹரீஸ், மானாமதுரை முருகேசன், மதுரை ஜெயஸ்ரீ உட்பட 15 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் திருப்புவனம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.