தமிழகம் முழுவதும் LSS அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்... முதல்வர் விஜய் அறிவிப்பு!

 
பேருந்து

 

தமிழகத்தில் இல்லத்தரசிகள் மற்றும் மகளிரின் பயணச் சுமையைக் குறைக்கும் வகையில் புதிய திட்டத்தை முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அதன்படி, அக்டோபர் 2ஆம் தேதி முதல் மகளிர் கட்டணமின்றிப் பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரப் பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், எல்.எஸ்.எஸ். (LSS) பேருந்துகளிலும், மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர் மற்றும் மலைப்பகுதி சாதாரண பேருந்துகளிலும் இந்தச் சலுகை பொருந்தும். இந்த இலவசப் பயணத் திட்டம் திருநர்களுக்கும் முழுமையாகப் பொருந்தும் என அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தைப் பயன்படுத்துவதற்கு எந்தவிதமான வருமான வரம்போ அல்லது பயண எண்ணிக்கைக் கட்டுப்பாடோ கிடையாது எனவும் சட்டப்பேரவையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி அறிவிப்புக்குத் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.