அதிமுக இடைத்தேர்தல் ... இன்று முதல் விருப்ப மனு அறிவிப்பு!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு வரவிருக்கும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்தத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக விருப்பமனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வரவிருக்கும் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது தற்போது உறுதியடைந்துள்ளது.
முன்னதாக இந்தத் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததன் காரணமாகவே மேற்கண்ட இந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளும் காலியாகின.
இதையடுத்து இன்று முதல் விருப்பமனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் கட்சியினர் மத்தியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தகுதியான விருப்பமனுக்களைப் பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து வழங்குவதற்கான ஏற்பாடுகளைக் கட்சித் தலைமை தீவிரப்படுத்தியுள்ளது.
