மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்... திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

 
mathuranthagam

 

வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயர்களைக் கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் விவரம்:

  • மதுராந்தகம் தொகுதி: திமுக சட்டத்துறை இணைச் செயலாளரான பரந்தாமன் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • தாராபுரம் தொகுதி: தாராபுரம் இடைத்தேர்தலில் வழக்கறிஞர் எஸ்.சுகன்யா திமுக வேட்பாளராகக் களமிறங்குகிறார்.

முன்னதாக 2021 தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பரந்தாமனுக்கு 2026 பொதுத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், தற்போது மதுராந்தகம் இடைத்தேர்தலில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்து.