இந்த ஆண்டுக்குள் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்!! இஸ்ரோ தலைவர்!!

 
பிஎஸ்எல்வி

இன்று காலை 6.30 மணிக்கு இந்திய  விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில்   உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின்  1வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.  இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்ட 'டிஎஸ்-சாட்' என்ற முக்கிய   செயற்கை கோளுடன்   மொத்தம் 7 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

ராக்கெட்

இந்த 'டிஎஸ்-சாட்' செயற்கை கோள் டி.எஸ்.டி.ஏ.மற்றும் எஸ்.டி. என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி56 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கை கோள்கள் புவி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.  இந்நிலையில், பி.எஸ்.எல்.வி ராக்கெட் வணிக ரீதியான பயன்பாட்டிற்கு மிகவும் நம்பகத்தகுந்ததாக இருக்கும்.  

தனியார் ராக்கெட்

அடுத்த ஆண்டு முதல்  முழு வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு வந்து விடும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.   இந்த ஆண்டில் இஸ்ரோ அதிக விண்வெளி பயணங்களை மேற்கொள்ளும். அதன்படி   ஆகஸ்ட் இறுதி வாரம் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில், பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.   அதனை தொடர்ந்து, ககன்யான் இந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும் சோம்நாத் தெரிவித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web