நாடு முழுவதும் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு: அக்டோபர் 6-ல் வாக்குப்பதிவு!
இந்தியாவில் மொத்தம் 6 தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதி உறுப்பினர் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி உறுப்பினர் சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து இந்தத் தொகுதிகள் காலியாகின.

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டைத் தொடர்ந்து அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம் மாநிலங்களில் காலியாக உள்ள மேலும் நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இந்த ஆறு தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேத்துடன் நிறைவடைகிறது. அக்டோபர் 6 அன்று வாக்குப்பதிவு நடைபெற்று, அக்டோபர் 9 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
