'சி.ஜோசப் விஜய் சாலை'... பரந்தூர் விவசாயிகள் அறிவிப்பு... முதல்வரை நேரில் சந்தித்து நன்றி!

 
பரந்தூர்

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்ததற்காக, ஏகனாபுரம் பிரதான சாலைக்கு முதலமைச்சர் விஜய்யின் பெயரைச் சூட்ட உள்ளதாகப் பரந்தூர் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த பரந்தூர் பகுதி விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்துத் தந்ததற்காகத் தங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

பரந்தூர்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தற்போதைய அரசு, தங்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து நிலங்களைப் பாதுகாத்துள்ளதாக விவசாயிகள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.

பரந்தூர்  

முதலமைச்சர் விஜய்யின் இந்த நடவடிக்கையைப் பெருமைப்படுத்தும் வகையிலும், அவருக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், பரந்தூர் ஏகனாபுரம் பிரதான சாலைக்கு "சி.ஜோசப் விஜய் சாலை" எனப் பெயரிட உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.