மரண தண்டனையை உடனே நிறைவேற்றுங்க... கவின் நியூசம் முடிவுக்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு!

 
டிரம்ப்

 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 548 மரண தண்டனைக் கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க ஆளுநர் கவின் நியூசம் முடிவெடுத்துள்ளார். இந்த முடிவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இந்த முடிவு நீதியை மறுப்பதாகக் குற்றம்சாட்டிய டிரம்ப், குழந்தைகளைக் கொலை செய்பவர்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை அல்லது கடத்தலின்போது கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை கோருமாறு நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ட்ரம்ப் டிரம்ப்

குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.