உடனடி அமலுக்கு வந்தது... முட்டை விலை ஒரே நாளில் 20 காசுகள் குறைப்பு.. தேக்கத்தைத் தவிர்க்க விலைகுறைப்பு!
Updated: Mar 23, 2026, 08:38 IST
நாமக்கல் மண்டலத்தில் முட்டை பண்ணைக் கொள்முதல் விலையில் இன்று அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விலைகுறைப்பு உடனடியாக இன்று காலை முதலே அமலுக்கு வந்தது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முட்டை விற்பனை வாய்ப்பு மற்றும் பிற மண்டலங்களின் விலை நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பழைய விலை: ரூ. 4.45. தற்போது 20 காசுகள் குறைக்கப்பட்ட நிலையில், புதிய விலையாக ஒரு முட்டை ரூ. 4.25க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று காலை முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

