பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு! தூங்கிக் கொண்டிருந்த 15 பொதுமக்கள் பலி

 
துப்பாக்கிச்சூடு

 

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனின் வடக்கு பகுதியில் உள்ள மேட்குவா கிராமத்தில் ஆயுதம் ஏந்திய குழுவினர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 15 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.மகாரி நகருக்கு அருகே உள்ள இந்த கிராமத்துக்குள் நேற்று புகுந்த ஆயுதம் ஏந்தியவர்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 15 பேர் உயிரிழந்ததுடன், பலரும் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலைத் தொடர்ந்து அருகிலுள்ள சுமார் 10 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறியுள்ளனர். கேமரூனின் இந்த வடக்கு பகுதி, போகோ ஹராம் மற்றும் பிற ஆயுதக் குழுக்களின் வன்முறையால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கவில்லை. எனினும், அந்த பகுதியில் செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மேற்கு ஆப்பிரிக்க கிளை இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.