கேம்பஸ் இண்டர்வியூ... சென்னை ஐஐடி மாணவருக்கு ரூ.4.30 கோடி சம்பளத்தில் வேலை!
சென்னை ஐஐடியில் படித்த மாணவருக்கு ரூ.4.30 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.
டெல்லி, மும்பை, கோரக்பூர், கவுகாத்தி உட்பட நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் 2024-25ம் ஆண்டுக்கான கேம்பஸ் பிளேஸ்மென்ட் தொடங்கியுள்ள நிலையில், சென்னை ஐஐடியில் படித்த மாணவருக்கு ரூ.4.30 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.

உலகில் உள்ள முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், கேபிடல் ஒன், குவாண்ட் பாக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமை நடத்தின. இதில், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும். அந்த வகையில், சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த மாணவர்களுக்கு நடைபெற்ற கேம்பஸ் பிளேஸ்மென்ட் நிகழ்வில், சென்னை ஐ.ஐ.டியில் படித்த மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.4.30 கோடி சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இது சென்னை ஐ.ஐ.டி பிளேஸ்மென்ட் வரலாற்றிலேயே முதல் முறையாக பார்க்கப்படுகிறது.

பிரபல வால் ஸ்ரீட் வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ரீட் நிறுவனம் ஐ.ஐ.டி சென்னை மாணவருக்கு மாதம் ரூ.35.80 லட்சம் என்ற வகையில் ஆண்டுக்கு ரூ.4.30 கோடி சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்கி உள்ளது. அதேபோல், பிளாக் ராக், கிளீன், டான்வின்சி போன்ற பிரபல நிறுவனங்களும் பல மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரையில் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
